திண்டுக்கல்: நீச்சல் தெரியாமல் அருவியில் குளித்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலியானதாக கூறப்படுகிறது.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார்த்திக்குமார் உடல் மீட்கப்பட்டு, உடற் கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 8 மாதக் குழந்தையுடன் அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறினார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.