புதுடில்லி: டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிப்பட உள்ளன. இதனால் 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு விழாவில் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இனி 2026 ஆம் ஆண்டில்தான் பங்கேற்க முடியும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை மத்திய அரசின் ஆணை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.