சென்னை: ரம்ஜான் நோன்பு நாளை தொடங்கும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் காணப்படும் பிறை நிலவின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி, நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலையில் ரம்ஜான் மாத பிறை தென்படவில்லை. எனவே, ஷரிய சட்டப்படி நாளை ரம்ஜான் மாதத்தின் முதல் பிறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்க உள்ளனர்.