குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சூழ்நிலையில், குன்னூர் மின்சார வாரியத் துறையினர் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தாழ்வான மின் கம்பிகளை சரிசெய்து, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர்.
இருப்பினும், குன்னூர் மலைப்பாதையில் குன்னூர் – காந்திபுரம் இடையே 2 மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.

அந்தப் பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், இதுபோன்ற மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின்சார வாரியத் துறையினர் உரிய ஆய்வு நடத்தி, விபத்துகளைத் தடுக்க ஆபத்தான மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.