சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களில் உள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விதிகளை 100% பின்பற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மாணவர்கள் இருக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம். மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் பெண் உதவியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விதிகளை அமல்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.