திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே, நேற்று, கடல் உள்வாங்கியதால், பாசி படிந்த பாறைகள், 60 அடிக்கு உள்வாங்கின. ஆறு கோவில்களில் இரண்டாவது திருச்செந்தூர் முருகன் கோவில் அழகிய கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு கடல் உள்வாங்கி இயல்பு நிலைக்குத் திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு 7.24 மணி முதல் 5.12 மணி வரை அமாவாசை திதி இருந்தது.
இதனால் கோயில் கடற்கரையில் உள்ள அய்யா கோயில் அருகே சுமார் 60 அடி உயரத்துக்கு கடல் உள்வாங்கிக் காணப்பட்டது. இதன் காரணமாக பச்சை பாசி படர்ந்த பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் வந்து கொண்டிருந்தாலும், பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல் கடலில் குளித்தனர்.