மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து 4,000 கனஅடியாக இருந்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 2,034 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், நேற்று முன்தினம், 107.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 107.59 அடியாக சற்று உயர்ந்தது. நீர் இருப்பு 75.02 டிஎம்சி உள்ளது.