By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
தமிழகம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

Nagaraj
Last updated: July 7, 2025 6:20 pm
By Nagaraj 4 Min Read
Share
SHARE

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.

இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த சூழலில் வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் இன்று தொடங்கியது. இதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டின் கீழ் 51,004 பேர் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்திருந்தார்கள்.

இதில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும். இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று (ஜூலை 7ம் தேதி) மற்றும் நாளை (8-ம் தேதி) நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பொது கலந்தாய்வு ஜூலை 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆன்லைன் கலந்தாய்வு மற்றும் அது தொடர்பான விவரங்களை அறிய www.tneaonline.org என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்வையிடலாம்.

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு 64 மாணவர்கள் 200 கலந்தாய்வு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 144 மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன

கலந்தாய்வு, கல்லூரிகள், இன்று தொடக்கம், தரவரிசை பட்டியல், மாணவர்கள்,சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

You Might Also Like

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?

TAGGED:collegescounselingRank Liststarting todaystudentsஇன்று தொடக்கம்கலந்தாய்வுகல்லூரிகள்தரவரிசை பட்டியல்மாணவர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?