ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1200 கனஅடியாக சரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் மழையின்மையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
இருந்த போதிலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் நேற்று காலை வினாடிக்கு 2000 கன அடியாக நீடித்து வந்தன.
இந்த நிலையில் இந்த நீர்வரத்து சரிந்து தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து உள்ளது.