சென்னை: முந்தைய காலங்களில் ஆணைவிட பெண்ணுக்கு வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்படி பெரியவர்கள் மணமுடித்து வைத்தார்கள். நாளடைவில் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது ஆண்களோ, பெண்களோ அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வது பேஷனாகி வருகிறது.
குறிப்பாக பழங்காலங்களில் இருந்ததைப் போல தன்னை விட 10-15 வயது குறைவான வயதுடைய பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வது மீண்டும் அதிகரித்து வருகிறது. நடிகர்கள், மாடல்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இதுபோல திருமணம் செய்துகொள்வது ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்து தற்கால இளைஞர்களும் இதுபோல மிகவும் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே சரியானது தானா? என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுவர். ஒரு 20 வயது எவ்வளவு முதிர்ச்சி இருக்குமோ அதே அளவு முதிர்ச்சியே ஒரு 23 வயதுடைய ஆணுக்கு இருக்கக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதேபோல பெண்களின் இளமை என்பது மிகவும் குறுகிய காலமே உடையது. மாதவிலக்கு, குழந்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 40 வயதுக்குள்ளேயே பெண்களின் இளமை முடிவுக்கு வந்து விடுகிறது. ஆண்களுக்கு அதுபோல இல்லை. 60 வயதிலும் ஒரு ஆணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் ஆண்கள் தங்களை விட 10-15 வயது குறைவான பெண்களை மணம் முடிப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்களைப்போல தங்கள் பெண்ணை வரப்போகிற மாப்பிள்ளையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வயது அதிகமாக இருந்தாலும்
பரவாயில்லை என தங்கள் சொந்தபந்தம், உறவினர்கள் மத்தியிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்து விடுகின்றனர். சொந்தக்காரர்கள் என்றால் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் அதிகமாக இருப்பதே இதற்குக்காரணம்.