திருமாவளவன் தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் சி.பி.ஐ விசாரணையை விரும்புவதாகவும், அதை வரவேற்கிறோம் என்றும், அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி வழக்கில் சி.பி.ஐ. வேண்டாம் என்று கூறுகிறார், இங்கு ஒரு பதில் அங்கு ஒரு பதில் பேசுகிறார் என திருமாவளவன் குறித்து பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
மேலும், ஸ்காட்லாந்துக்கு இணையான சுதந்திரத்தை நமது காவல்துறைக்கு வழங்க வேண்டும், தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி என பலர் படுகொலை செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் மாபெரும் தலைவரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அன்புமணி கூறியுள்ளார். .
மேலும் நண்பர் ஆம்ஸ்ட்ராங் இறந்த செய்தி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்தச் சம்பவம் தமிழகத்தின் சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வரும் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.