தஞ்சாவூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், 16 ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபத்தில், தமுஎகச பட்டுக்கோட்டை கிளை சார்பில் வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம், கிளைத் தலைவர் ந.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கிளைச் செயலாளர் பாக்ய பாலா வரவேற்றார். “வெறுப்பின் கொற்றம் வீழ்க… அன்பே அறமென எழுக” என்ற தலைப்பில், மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், பாரதி பேரியக்கத் தலைவர் சிவ.தங்கையன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எஸ்.கந்தசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
“தமிழக பண்பாட்டுத் தளத்தில் 50 ஆண்டு கால பயணம்” என்ற தலைப்பில்,
தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் நிறைவுரையாற்றினார்.
இதில், தமுஎகச மாவட்டத் தலைவர் முருக.சரவணன், மாவட்டச் செயலாளர் ப.சத்தியநாதன், மாவட்ட துணைத் தலைவர் இரா.விஜயகுமார், ஓய்வூதியர் சங்க செயலாளர் சிவ.ரவிச்சந்திரன், ஆர்.எஸ்.வேலுச்சாமி, சரிதா பாலா, கு.பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புக்குழு உறுப்பினர்களை மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் முன்மொழிய, கிளை துணைச் செயலாளர் சி.மணிமாறன் வழிமொழிந்தார்.
வரவேற்புக்குழுத் தலைவராக சிவ.தங்கையன், செயலாளராக பாக்யபாலா, ஆலோசகர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா.அசோக்குமார் (பேராவூரணி), பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமாா், முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மருத்துவர் கவிக்குயில் செல்லப்பன் மற்றும் 6 துணைத்தலைவர்கள், 6 துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற சுமித்ரா சத்தியமூர்த்தி பாராட்டப்பட்டார். பாரதி இயக்கத் தலைவர் சிவ.தங்கையன் ரூ.1 லட்சம் மாநாட்டு நன்கொடையாக வழங்கினார். இதேபோல் பல்வேறு தரப்பினரும் நன்கொடை வழங்கினர். நிறைவாக, கிளைப்பொருளாளர் கா.பக்கிரிசாமி நன்றி கூறினார்.