சென்னை: குரூப் 4 பணியிடங்களில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவு, தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரம் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் கம்ப்யூட்டர் பாத்வே சான்றிதழ் சரிபார்ப்புக்கான மதிப்பெண்கள், ஒட்டுமொத்த ரேங்க் எண், இட ஒதுக்கீடு விதி, காலியிடங்களின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த 7-ம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினி வழிச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேற்று முதல் நவம்பர் 21-ம் தேதி வரை தங்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி விண்ணப்பித்துள்ளது.