சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இது தவிர மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்று மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
2-ம் செமஸ்டர் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப்புத்தகங்களையும் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், பருவமழை தொடங்குவதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர, மாணவர்கள் பங்கேற்கும் கலை விழா போட்டிகளுக்கான நடைமுறைகள், மகிழ் முற்றம் திட்டத்தில் மாணவர் குழுக்கள் அமைப்பது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.