சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, சேலம், ஏற்காடு உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்த நிலையில், பகல் முழுவதும் பல இடங்களில் லேசான மழை மட்டுமே காணப்பட்டது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
அதிகபட்சமாக ஓமலூரில் 18 மி.மீ., சங்ககிரியில் 16.1 மி.மீ., தலைவாசலில் 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதர இடங்களில் மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):
மேட்டூர் 13.8, டேனிஷ்பேட்டை 9.5, சேலம் 9.2, கரியகோவில், ஏற்காடு தலா 9, கெங்கவல்லி 8, எடப்பாடி 7.2, தம்மம்பட்டி, ஆனைமேடு தலா 7, வீரகனூர் 6, ஏத்தாபுரா 4, வாழப்பாடி 1.5 மி.மீ. பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. புதிய பேருந்து நிலையம், மெய்யனூர், திருவாக்கவுண்டனூர் போன்ற இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை காரணமாக சாலையில் போக்குவரத்து மிகவும் மந்தமாக இருந்தது. இதேபோல், ஏற்காடு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் அவ்வப்போது லேசான மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. சேலம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (16ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (16-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது.