சென்னை: மகாவீர் ஜெயந்தி வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுக்கடை விதிகளின் கீழ் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் தொடர்புடைய பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், மதுக்கடைகள், மதுபானக்கடைகள் ஆகியவற்றை மூட வேண்டும்.

மதுபானங்களை விற்கக் கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.