கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடந்த 30-ம் தேதி ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். பின்னர் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் நடக்க அனுமதிக்கப்படவில்லை.
மேலும் 4 நாட்களுக்கு அங்கு படகு சேவை இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் கடல் சீற்றம் குறைந்ததையடுத்து விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை மதியம் 12.15 மணிக்கு தொடங்கியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திரளாக படகில் ஏறினர். இதையடுத்து நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
படகில் ஏறிய 5,000 பேர் கண்ணாடி பாலத்தில் நடந்து கடலின் அழகை ரசித்தனர். அவர்களும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.