பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் புகழ்பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பர்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து நீராடுகின்றனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று அருவியில் தண்ணீர் வரத்து சீரானது. இதனால் நேற்று முதல் அருவியில் குளிக்கலாம். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.