கன்னியாகுமாரி: கன்னியாகுமரியில், கடலின் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளன. இந்த இடங்களை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் பார்வையிடுகின்றனர்.
அவற்றைப் பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை இயக்கி வருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் கட்டப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்று, அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தின் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையைப் கண்டு ரசித்தனர். கண்ணாடி இழை கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், நேற்று முதல் சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் வழியாக நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.