உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் கடும் குளிருடன் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் மற்றும் பிற சுற்றுலா மையங்கள் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. பகலில் வானிலை இதமாகவும், வெயிலாகவும் இருக்கும்.
விடுமுறை நாளான நேற்று உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கர்நாடகா. கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வார இறுதி நாள் என்பதால் மற்ற சுற்றுலா மையங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.