டெல்லி: திமுக லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு ராமேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே பார்லிமென்ட் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். ரயில்வே தொடர்பான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூட்டத்தில் கலந்து கொண்ட பேசுகையில், ”சென்னை மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லி-புதுச்சேரி, புவனேஸ்வர்-புதுச்சேரி, புவனேஸ்வரம்-ராமேஸ்வரம் ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். பனாரஸ் – ராமேஸ்வரம், பிரோஸ்பூர் – ராமேஸ்வரம், அயோத்தி – ராமேஸ்வரம் ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார். டி.ஆர். பாலு, ரயில்வேக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் சி.எம். ரமேஷ், ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.