சென்னை: டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை சிக்னலில் இருந்து ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலை வரை மழைநீர் வடிகால் பணி இன்று முதல் மேற்கொள்ளப்படுவதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் போக்குவரத்து இருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, டிடிகே சாலையில் மியூசிக் அகாடமி நோக்கி வரும் நகரப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி, ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, முர்ரேஸ் கேட் சாலை வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி, சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

டிடிகே சாலையில் மயிலாப்பூர் நோக்கி வரும் நகரப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி, ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, பி.எஸ். சிவசாமி சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.