சென்னை: திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை பூக்கடை பகுதியில் இருந்து புறப்பட்டு, நாளை (2-ம் தேதி) திருப்பதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் காவல் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
வாகன ஓட்டிகள் ஈவிஆர்ஏ சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம். வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை அல்லது மின்ட் வழியாக ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசுவாமி சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி முனையிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதி இல்லை. அப்போது, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியும்.
திருக்குடை ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையை அடையும் போது, நாராயண குரு சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.
வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். திருப்பதி திருக்குடை ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து அவதான பாப்பையா சாலையை அடையும் போது சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.
பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். பேரணி பெரம்பூர் பேரக்ஸ் சாலையை அடையும் போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.
நாராயணகுரு சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்லின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பு நோக்கி செல்ல அனுமதி இல்லை.
புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும் போது, கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஓட்டேரி சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேடவாக்கம் குளம் ரோடு வழியாக வாகனங்கள் செல்லலாம். ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை அடையும் போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.
வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் இருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி.காலனி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம். இதனை போக்குவரத்து போலிஸார் அறிவித்துள்ளனர்.