சென்னை: வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட, கார், பைக், வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளி பகுதியில் உள்ள பாலத்து பாலத்தில் சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால், வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது.இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஏராளமான வாகனங்கள் வருவதால், நீண்ட தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. பாலாட்டு பாலத்திலிருந்து பழவேலி வரை 3 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.