சென்னை: காலதாமதமான பணப்பலன்களுக்கு வட்டி வசூலிக்க கோர்ட்டுக்கு செல்ல உள்ளதாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலால் போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு இது வரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் காலதாமதமான பணப்பலன்களுக்கான வட்டி அனைவருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா, நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 6 சதவீத வட்டி வழங்கப்படுகிறதா?

இதற்குப் பதிலளித்துப் போக்குவரத்துத் துறையினர் கூறுகையில், ‘‘ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் காலதாமதமான பணப் பலன்களுக்கான வட்டி, நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சதவீதத்தில் ஒரே தவணையாக வழங்கப்படுகிறது.
இது ஓய்வூதியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓய்வூதியர்கள் சிலர் கூறுகையில், “அரசு பணப்பலன்களை காலதாமதமாக வழங்குகிறது. அதற்குரிய வட்டி தொகையை வழங்குவது அரசின் கடமை. இதற்காகவும் ஓய்வூதியர்களை நீதிமன்றத்திற்கு இழுப்பது ஏற்புடையதல்ல.