திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு பின்புறம் ஜலகாம்பாறை அருவி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோயிலும் உள்ளது. இந்த அருவிக்கு வரும் மக்களும், சுற்றுலா பயணிகளும் இயற்கை எழில் சூழ்ந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஜலகம்பாறை அருவியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில், தற்போது தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஜலகம்பாறை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதன்படி விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரண்டு ஜலகம்பாறை அருவியில் ஆனந்த நீராடினர்.
நேற்று திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் அருவியில் குளிப்பது குறிப்பிடத்தக்கது.