சென்னை: அமெரிக்க அரசியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் முக்கியமான ஆளுமைகள் எனக் கருதப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தற்போது நேரடியாக மோதும் நிலைக்கு வந்துள்ளனர். உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர், உலகின் செல்வரான தொழில்முனைவோர் மற்றவர். இவர்களுக்கிடையிலான மோதல், அமெரிக்க அரசியலையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு சென்றுள்ளது.

டிரம்ப் அரசியல் செல்வாக்கு மற்றும் பெரும் ஆதரவாளர்களைக் கொண்டவர். குடியரசுக் கட்சியின் முன்னணி நபராகவும், அரசு அமைப்புகள் மற்றும் சட்ட அமைப்புகளில் தன்னுடைய தாக்கத்தை நிரூபித்துள்ளார். பல்வேறு அமெரிக்க அரசாங்க அமைப்புகள் — NASA, DoD போன்றவை — இவரது கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மற்றபுறம், எலான் மஸ்க் தொழில்நுட்ப உலகை கட்டிக்கொண்டிருக்கும் நபர். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) போன்ற நிறுவனங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இளம் தலைமுறை மற்றும் உலகளாவிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர். ஊடக வலிமையும் இவரது பக்கமே.
மஸ்க், டிரம்ப் மீது ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளார். இது உண்மையாக உறுதியாகுமாயின், அது டிரம்ப் மீது பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இதன் வழியாக மஸ்க், ஜே.டி. வான்ஸை அதிபராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கலாம். அதேசமயம், டிரம்ப் மஸ்க் நிறுவனங்களுக்கு அரசியல் அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கலாம்.
இருவரும் நேரடியாக தேர்தலில் மோதவில்லை என்றாலும், இவர்களது வாக்குகளும், ஆதரவாளர்களும் நாட்டில் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. டிரம்ப் ஆட்சி அமைப்புகள் வழியாக தாக்கம் செலுத்த, மஸ்க் பணம், ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் வழியாக தாக்கம் செலுத்துகிறார்.
இக்காரணமாக குறுகிய காலத்தில் டிரம்ப் வெற்றி பெற்ற போல் தோன்றலாம். ஆனால் நீண்டகாலத்தில் எலான் மஸ்க் சமூக, தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய ஆதரவின் மூலம் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இந்த மோதல், பாரம்பரிய அரசியலுக்கும், புதிய தலைமுறை தொழில்நுட்ப சக்திக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது.