சென்னை: ராமநாதபுரத்தில் நடந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், வீட்டை விட்டு பிரிந்தவர்கள் என பலரும் ரேஷன் கார்டுகளை வாங்க துவங்கியுள்ளனர்.
இப்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஓரிருவர் இல்லை. மொத்தம் 2.80 லட்சம் பேர். இதுவரை வழங்கப்படாத மீதமுள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதன்படி, ரேஷன் கடைகளில் இதுவரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில், 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.
1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கும் புதிய முறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சில கால தாமதம் ஏற்பட்டது. இந்த காலதாமதம் நீங்கி.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்து 1 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாததற்கு மக்களவைத் தேர்தல்தான் காரணம். லோக்சபா தேர்தல் விதிமுறைகளால், ரேஷன் கார்டு வழங்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணியை செய்ய முடியவில்லை.
இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பலருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்றும்.. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. முதன்முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக பதிலளித்தார். பெண்களுக்கான உதவித்தொகையை யாரையும் விட்டு வைக்காமல் எங்களால் இயன்ற முறையில் வழங்கி வருகிறோம். எங்களால் முடிந்த அளவு கூடுதல் நபர்களுக்கு விதிகளின்படி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 3 மாதங்களில் ₹1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஓய்வூதியம் மற்றும் பிற அரசு நிதியை வங்கியில் பெற்று வரும் பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் போது இதற்கான அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.
ஆவணங்கள் சரியில்லாத வேறு சில பெண்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மேலும் அரசு நிதியை வங்கியில் பெறக்கூடிய பெண்களுக்கு இப்போது அல்ல, எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். மாறாக, ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களும், திருமணமான மற்றும் குடும்பத் தலைவியான பெண்களும் விண்ணப்பிக்கலாம். இப்போது சாத்தியமில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் இத்திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். விடுபட்டவர்கள் அப்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.