சேலம்: தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசி வடமாநிலங்களுக்கும், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் செல்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மழை இல்லாததால் தமிழகத்தில் சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் சாகுபடி பரப்பு குறைந்தது. இதனால் நடப்பு சீசனில் நெல் வரத்து குறைந்து அரிசி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சேலத்தை சேர்ந்த அரிசி வியாபாரிகள் கூறியதாவது:- தமிழகத்தை பொறுத்த வரை, கடந்தாண்டு மழை பெய்யாததால், சாகுபடி பரப்பு சரிந்தது. இந்த ஆண்டு அரிசி தேவையில் வட மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. புத்தாண்டுக்கு பிறகு புதிய அரிசி வழக்கம் போல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக, இந்த ஆண்டு அரிசி வழக்கமான விநியோகத்தை விட 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நெல் கிலோ ரூ.19.20க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது ரூ.21.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவு, வேகன் செலவு, தொழிலாளர் ஊதியம் போன்றவை அதிகரித்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு அரிசி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 100 கிலோ எடையுள்ள வெள்ளைப் பொன்னி மூட்டை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரை விற்பனையானது. இந்த ஆண்டு மூட்டைக்கு ரூ.1000ல் இருந்து ரூ.1200 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,000 முதல், 7,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக ரூ.4,600 முதல் ரூ.4,800 வரை விற்ற கர்நாடக டீலக்ஸ் பொன்னி ரூ.5,600 முதல் ரூ.6,000 வரையிலும், பிபிடி ரகம் ரூ.4,600 முதல் ரூ.5,000 வரை ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், ரூ. கடைசி வகை IR 20, IR. 50 அரிசி கூட மூடைக்கு ரூ.400ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி 5 சதவீதம், நெல் விலை உயர்வு, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அரிசி விலை குறையவேண்டுமானால், அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை மத்திய அரசு நீக்க வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட நெல் விலையை குறைக்க வேண்டும்.
இவை இரண்டையும் செய்தால் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை செலவு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர். இட்லி அரிசியும் விலை அதிகம் மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் பெரும்பாலும் இட்லி அரிசியில் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இட்லி அரிசி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டை பொறுத்தமட்டில் வட மாநிலங்களிலும் இட்லி அரிசிக்கான நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் இட்லி அரிசி வரத்தும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இட்லி அரிசி குறைந்தபட்சம் ரூ.34-க்கும், அதிகபட்சமாக ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு குறைந்தபட்சம் ரூ.40-க்கும், அதிகபட்சமாக ரூ.46-க்கும் விற்பனையாகிறது.