உதகை: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயிலில் செல்வதற்காக அதிகளவான சுற்றுலா பயணிகள் செல்லும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கல்லாறு ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பர் 3-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் மலை ரயில் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை காரணமாகவும், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாகவும் மலை ரயில் இயக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிந்து மழை ஓய்ந்ததால் மலை ரயில் சேவை துவங்கியது.
5 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அதில் பயணம் செய்தனர். மலை ரயிலில் பயணம் செய்யும் போது அனைவரும் இயற்கை அழகை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.