திண்டுக்கல்: 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, திண்டுக்கல்லில் பிப்ரவரி 22-ம் தேதி மக்கள்நலக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் 12 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்-2-ல் நடந்து வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் உட்பட 12 பேர், திண்டுக்கல் ஜே.எம்., 2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன் நேரில் ஆஜராகினர். வழக்கை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.