சென்னை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தில், நெடும்பள்ளி என்ற இடத்தில் அணை இருப்பதாகவும், அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்றும், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் ஒரு டயலாக் உள்ளது.

இரண்டு ஷட்டர்களை திறந்தால், மக்களை கொன்ற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டுகளால் தகர்த்தால், கேரளா மீண்டும் தண்ணீரில் மூழ்கும் என்று ஒரு டயலாக். அணையைக் காப்பாற்ற செக் டேம்களால் எந்தப் பயனும் இல்லை, அணையே இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஒரு டயலாக். முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு இதுபோன்ற டயலாக்குகள் மற்றும் காட்சி அமைப்புகளை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் எம்புரான் திரைப்படம் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த காட்சி உரையாடல்கள் அகற்றப்பட வேண்டும். தமிழக அரசு திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.