கோவை: தமிழக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். இத்திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி கிடைத்த நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆவணங்களை தமிழக அரசு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, மெட்ரோ திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.