சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கங்கள், புலிகள், கரடிகள், யானைகள், மான்கள் மற்றும் பல பறவைகள் உட்பட பல அரிய விலங்குகள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வண்டலூர் உயிரியல் பூங்கா பராமரிப்பு பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்கிழமை விடுமுறை விடுவது வழக்கம். இருப்பினும் 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31-ம் தேதி திறந்திருக்கும். எனவே பார்வையாளர்கள் வழக்கம் போல் வந்து மகிழலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.