புதுடெல்லி: மகாராஷ்டிராவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரயில்வே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினலில் இருந்து ஷீரடிக்கு நேற்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (22223) முற்றிலும் பெண்களால் இயக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அதிகாரிகள் செய்தனர்.
இந்த ரயிலை இயக்கிய டிரைவர், இணை டிரைவர், உதவியாளர், ரயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில் ஊழியர்கள் அனைவரும் பெண்கள் என்று மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா தெரிவித்தார்.