புதுடெல்லி: சென்னை-தூத்துக்குடி இடையே அதிகரித்து வரும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகம் செய்து, தற்போதுள்ள முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெரிசலை குறைக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “தற்போது சென்னை-தூத்துக்குடி இடையே சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் (12693/12694) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக இணைப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் ரயில் 16127/16128 சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, 56725/56726 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் 22667/22668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்களுக்கான போக்குவரத்துத் தேவை மற்றும் ஆதாரங்களின் இருப்பைப் பொறுத்து தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது ரயில்வேயின் செயல் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.