சென்னை: இயக்குநராகவும், நடிகையாகவும் புதிய அனுபவத்தில் உள்ள வனிதா விஜயகுமார், தன்னுடைய புதிய படம் “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளராக வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் செயல்பட்டுள்ளார்.

இந்த படம் நாளை வெளியீடாக உள்ள நிலையில், வனிதா சொல்வதாவது, படம் எப்படி வரவேற்ப்பை பெறும் என்ற கவலை தனக்கு இருப்பது இயல்பே என்றும், எந்த எதிர்வினையும் எதிர்பார்க்கும் மனநிலையில் தான் இருக்கிறேன் என்றும் கூறினார். படத்தில் உள்ள பாஸாகள் சிலர் “அடல்ட் கான்டென்ட்” என கூறுகிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறைக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மற்றும் தனது மகள் ஜோவிகா மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வரும் நிலையை பற்றி அவர் பேசினார். இது போன்ற விமர்சனங்கள் ஒரு நட்சத்திரமாக உயர்வதற்கான அறிகுறி என அவர் கூறினார். “கோயம்புத்தூர் மாப்பிள்ளை” படத்தில் விஜய்யின் முகம் மீது கிண்டலான காட்சிகள் இருந்ததையும், “நாளைய தீர்ப்பு” படத்திலும் அவர் விமர்சனங்களுக்கு ஆளானதை நினைவுபடுத்தி, அத்தனை விமர்சனங்களையும் தாண்டி விஜய் இன்று வெற்றியடைந்துள்ளார் என கூறினார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா மற்றும் தனது மகளும் எதிர்காலத்தில் பெரிய நடிகராக உயர்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆரம்பத்தில் நயன்தாரா, திரிஷா உள்ளிட்டோரும் இதேபோன்ற விமர்சனங்களை சந்தித்ததாக அவர் எடுத்துக்காட்டினார்.