சென்னை: ஓலா’ சர்வீஸ் சென்டரை முற்றுகையிட்ட வாகன உரிமையாளர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், சர்வீஸுக்கு விட்ட ஓலா மின்சார ஸ்கூட்டரை, ஒரு மாதத்துக்கு மேலாகியும் ஒப்படைக்காமல் இருப்பதாக கூறி, குரோம்பேட்டையில் உள்ள ஓலா சர்வீஸ் செண்டரை வாகன உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஆலையிலிருந்து உதிரி பாகங்கள் அனுப்பப்படாமல் உள்ளதால் வாகனங்களை சர்வீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வீஸ் செண்டர் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.