சென்னை: சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாலையோரம் நீண்ட நேரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், விவரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சிலர் தங்கள் வாகனங்களை அபராதத்துடன் திரும்பப் பெற்றனர். பலர் வாகனங்களைப் பெற முன்வரவில்லை. இதையடுத்து, உரிமை கோரப்படாத 953 இருசக்கர வாகனங்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 973 வாகனங்களை ஏலம் விட போலீஸார் முடிவு செய்தனர்.

இதற்காக இந்த வாகனங்களை சென்னை புதுப்பேட்டை காவல் நிலைய மைதானத்தில் காவல் துறையினர் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் வரும் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும். இந்த ஏலத்திற்கான முன்பதிவு வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெறும். அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவுச் சான்று உள்ள ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலதாரர்கள் முன்னிலையில் வரும் 26-ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெறும். 1,000 மற்றும் ஏலக்குழு நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை நாளை மறுநாள் செலுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.