சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும் இளங்கலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
கால்நடை மருத்துவ அறிவியல் பட்டயப் படிப்பில் சேர ஜூன் 3 முதல் ஜூன் 21 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முன்பதிவு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் என்ஆர்ஐகள் / என்ஆர்ஐகளின் வார்டுகள் / என்ஆர்ஐ ஸ்பான்சர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கான இதர விவரங்களை https://adm.tanuvas .ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். பிடெக் – உணவு தொழில்நுட்பம், கோழி வளர்ப்பு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தரவரிசைப் பட்டியல் www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படும். பல்கலைக்கழகம். தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.