தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்வில், பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 8,500 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி கட்சியின் களப்பணிக்கு வழிகாட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.

விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு வந்த விஜய்யை ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். தொண்டர்கள் வீசிய கட்சிக்கொடிகளை வெகுச்சலத்துடன் ஏற்றுக்கொண்ட விஜய், திறந்த வேனில் நின்று கையசைத்து வரவேற்பை ஏற்றார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மாநாட்டு நிகழ்வை தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட பரபரப்பை கருத்தில் கொண்டு, விஜய் தொண்டர்களிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டியதைக் கேட்டுக்கொண்டார். “பாதுகாப்புக்காக சொல்றேன், இன்னும் மூணு மணி நேரம் உங்களோட இருக்கப்போறேன், தயவு செய்து பின்னாடி இருங்க” என சொல்லி, தொண்டர்களை அமைதி பண்ணினார்.
கருத்தரங்கு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசும் போது, “வாக்குச்சாவடி முகவர்கள் சாதாரண நபர்கள் அல்ல. கட்சியின் வெற்றிக்கு நீங்களே பொறுப்பு. மக்கள் உங்களை பார்த்துத்தான் ஓட்டு போடப்போறாங்க” என்று உற்சாகம் ஊட்டினார். “கோடி ரூபாய் கொடுத்தாலும் தளபதிக்காக மட்டும் இருப்பீர்கள். இங்க இருக்கிற 8,500 பேர், 8.5 லட்சம் பேருக்குச் சமம்” என்று புகழ்ந்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வீடுகள் இருப்பது சாதாரணம். ஆனால், ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஒவ்வொரு வீட்டிலும் தளபதி விஜய் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். சிறிய தொகுதிகளிலும் அதிக ஓட்டு பெற்று, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில், தேர்தலுக்கு தயாராகும் முயற்சிகளும், எதிர்கட்சிகளை எதிர்கொள்ளும் திட்டங்களும் விவாதிக்கப்பட்டன. கட்சி சார்பாக வாக்காளர்களின் தேவைகளை நேரடியாக சந்தித்து தீர்வு காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கருத்தரங்கின் மிகப்பெரிய விசேஷம் விஜயின் நேரடி பங்கேற்பே. அவரது உரையும், தொண்டர்களுடன் எடுத்த உறுதிமொழியும் நிகழ்வுக்கு உயர்ந்த ஒலி அளித்தன. தொடங்கிய முதல்மாநாட்டிலேயே கட்சியின் ஒட்டுமொத்த போராட்ட உறுதி வெளிப்பட்டது.
இந்த நிகழ்வு, தவெக அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.