சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் சார்பில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறியதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ”தமிழக அரசு, யாருக்கும் டெண்டர் விடவில்லை என, கடந்த, 15-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
14 மற்றும் அதற்கான தொகை அக்டோபர் 10 அன்று பெறப்பட்டது‘ என்று வாதிட்டார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் ஜெ.ரவீந்திரன் கூறியதாவது:-
ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு பட்டாசு கடைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியானால் இன்னும் டெண்டர் விடவில்லை என்று நீதிமன்றத்தில் தவறான தகவல் ஏன் கொடுக்கப்பட்டது?
சாராயம் விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.
கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கூறுகையில், “காரணம் இல்லாமல் அரசு மீது பழி சுமத்தக்கூடாது, சொன்னால் அமைதியாக இருக்க முடியாது,” என்றார்.
அப்போது நீதிபதி, பட்டாசு விற்பனை மூலம் தனி நபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நல்லெண்ணத்தில் பேசுவதாக கூறினார். மேலும், அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.