கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, கோண்டூர் ஊராட்சி சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் தலைமையில் ஊராட்சி செயலர் வேலவன் மற்றும் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர்.