தர்மபுரி: ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.
இந்நிலையில், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அவ்விரு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை ஒகேனக்கல்லுக்கு 19,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 30,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை வருவாய்த் துறையினா் பூட்டினா். மேலும், கரையோரப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.