சென்னை: சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி, நீர்வளத்துறை, போக்குவரத்து தறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்கின்றனர். முதல் கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை படகு போக்குவரத்து திட்டமிடப்பட்டுள்ளது.