சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பாக துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தமிழ்நாட்டில் சுமார் 14,000 தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை. விடுப்பு இல்லை. நிரந்தர செவிலியர்களின் சம்பளத்தில் பாதி மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. தற்காலிக செவிலியர்களின் பதவிகள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.
இதேபோல், 6,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருந்தபோதிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் நியமனம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். நீங்கள் டாஸ்மாக், மருத்துவம் அல்லது காவல்துறை எடுத்தாலும், நிறைய காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் கூட இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். திமுக அரசு வெறும் விளம்பரம் மட்டுமே செய்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களையும் வெல்வோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். ஆனால், அனைத்து மக்களும் அந்தக் கூட்டணிக்கு எதிரானவர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மறுக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட வெளியிடப்படவில்லை. ஆனால், நாங்கள் சொன்னதால்தான் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது என்று திமுகவும் காங்கிரசும் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.