சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இது தொடங்கிய உடனேயே சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களை குறிவைத்தது. அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி தற்போது வரை வடகிழக்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சென்னையில் மழை இல்லை. இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் மழை சாரல் மழை பெய்தது. குறிப்பாக அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோரப் பகுதிகளை விட உள்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மழை குறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், எக்ஸ் தளத்தில் கூறியதாவது; சென்னையில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான நிகழ்வு அல்ல. சென்னையை கடந்து சென்ற மேகங்களின் ஒரு பகுதி திடீரென மழையை கொடுத்துள்ளது. கடும் மேக மூட்டமாக இருப்பதால், கனமழை பெய்துள்ளது. அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடர வாய்ப்புள்ளது என்றார். மேலும் மணலி புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தக்கரை ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவக் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் சென்னையில் மிக கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.