தஞ்சாவூர்: தஞ்சை மேம்பாலம் அருகில் இயங்கி வரும் பார்வை திறன் குறை உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ராஜன் அண்ட் நாதன் சார்ட்டட் அக்கவுண்டண்ட் பயின்ற ஜூனியர் மாணவர்கள் இணைந்து 25 பிளாஸ்டிக் சேர் மற்றும் ஒரு பீரோவை அன்பளிப்பாக வழங்கினர்.
தஞ்சை மேம்பாலம் அருகில் பார்வை திறன் குறைப்பாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு ராஜன் மற்றும் நாதன் ஆகியோரிடம் சார்ட்டட் அக்கவுண்டண்ட் பயின்ற ஜூனியர் மாணவர்கள் சார்பில் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆடிட்டர் என்.கண்ணன் தலைமை வகித்தார். ஆடிட்டர்கள் சந்திரசேகரன், ரமேஷ் ராஜா, சென்னை ஐகோர்ட் வக்கீல் சந்திரமோகன், ஓய்வுபெற்ற பேராசிரியர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பள்ளிக்கு 25 பிளாஸ்டிக் சேர் மற்றும் ஒரு பீரோ ஆகியவற்றை வழங்கினர். இவற்றை தலைமையாசிரியர் மாணிக்கராஜ், ஆசிரியை ஷோபியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சூசைநாதன், ஆடிட்டர் ஆனந்த ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.