சென்னை: கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது. இந்த நேரத்தில் எந்த பழங்கள் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோடைக்காலத்தில் கடும் வெப்பம் காரணமாக நமது உடல் நீர்ச்சத்து குறைந்து, உடல் ஆற்றலை இழக்கிறது. அதனை ஈடு செய்ய சில ஆற்றல் மிக்க பழங்கள் துணை நிற்கிறது என்கிறார்கள். கோடைகாலத்தில் அவ்வப்போது இம்மாதிரியான பழங்களை எடுத்து கொள்வது அவசியம் அவற்றில் சில பழங்கள்.
ஆப்பிளில் நீர்ம நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் சி யும் இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஒரு தெம்பை தருகிறது. மேலும் ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான 14 சதவீத அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி யும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பெப்டின் சத்தும் கோடைகாலத்தில் சிறுநீரகங்களை பாதுகாத்து சிறுநீரக கோளாறுகள் வராமல் பார்த்துக்கொள்கின்றன.
திராட்சையிலுள்ள வைட்டமின் சி யும், கே யும் மற்றும் குறைந்த கொழுப்பும், சோடியமும் கோடைக்கால தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகளை தடுப்பதுடன், வெயிலின் தாக்கத்திலிருந்து தோலையும் பாதுகாக்கிறது.
கொய்யாவிலுள்ள வைட்டமின் ஏயும், போலேட்,பொட்டாசியம், காப்பர் மற்றும் மெக்னீசியம் சத்தும், நீர்த்த நார்ச்சத்தும் கோடையி்ல் ஹார்மோன் பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுப்பதுடன், சர்க்கரை நோயாளிகளின் நலனையும் பாதுகாக்கிறது. கர்ப்பினிகளின் நலன் காப்பதுடன் கோடைக்காலத்தில் மூளை சூடு அடைவதையும் தடுக்கிறது.