திருச்சி: திருச்சி நகரில் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு எச்சரிப்பு மெமோ வழங்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா? இரவு நேரத்தில் தொடர் வழிப்பறிகள் நடந்ததாக எழுந்த புகாரில் இவ்வளவு மெமோக்கள் வழங்கப்பட்டுள்ளதாம்.
திருச்சி மாநகரில் இரவு ரோந்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஆய்வாளர்கள் உள்ளிட்ட 88 பேருக்கு காவல் ஆணையர் காமினி எச்சரிப்பு மெமோ வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காந்தி மார்க்கெட் காவல் சரகத்தில் கடந்த 23-ஆம் தேதி குறிப்பிட்ட 88 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் 2 சிறுவர்கள் மற்றும் இளைஞர் ஒருவர் பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு மெமோ வழங்கியுள்ள ஆணையர், பணியில் இனியும் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது.